திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிறந்தநாளில் ஆசையாக கேக் சாப்பிட்ட சிறுமி, புன்னகை மறைவதற்குள் மரணம்; கேக்கால் வந்த வினை..! பெற்றோர்களே கவனம்.!
ஆசைக்காக, சுவைக்காக நாம் சாப்பிடும் உணவுகளின் தரம் கேள்விக்குறியாகி வருவதால், பெற்றோர் கவனமுடன் இருப்பதே சாலச்சிறந்தது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலா பகுதியை சேர்ந்த சிறுமி மான்வி (வயது 10). சிறுமி அங்குள்ள பள்ளியில் பயின்று வருகிறார்.
கடந்த மார்ச் 24ம் தேதி சிறுமிக்கு பிறந்தநாள் ஆகும். இதனால் அவரின் பிறந்தநாளை கொண்டாட குடும்பத்தினர் ஆன்லைனில் சாக்லேட் கேக் ஆர்டர் செய்துள்ளனர்.
மெழுகு ஏற்றி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. சிறுமிக்கு கேக் வழங்கப்பட்ட பின்னர், அவர் நீர் குடித்துவிட்டு உறங்க சென்றுள்ளார்.
Shocking! Birthday turns into a nightmare, 10 year old girl in Patiala dies after consuming cake on her birthday!
— Sneha Mordani (@snehamordani) March 30, 2024
Video courtesy: @Gagan4344 pic.twitter.com/fpTRehN47S
மறுநாள் காலையில் சிறுமி எழுந்துகொள்ளாமல் மயங்கி இருக்க, அவரை மீட்டு குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்ற சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுமி சாப்பிட்ட உணவு விஷமாக மாறியதால் அவர் உயிரிழந்தது தெரியாந்துள்ளதால், பேக்கரி மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேக் சாப்பிட்டவர்களிலி 2 சிறுமிகள் வாந்தி எடுத்து அவதிப்பட்ட நிலையில், மான்வி மட்டும் உயிரிழந்து இருக்கிறார்.
குழந்தையின் பிறந்தநாளை கொண்டாடி, அவர் முகத்தில் உள்ள புன்னகை மறைவதற்குள் குழந்தையை பறிகொடுத்த சோகத்தில் குடும்பத்தினர் கண்ணீருடன் தவித்து வருகின்றனர்.