ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
8 வது மாடியில் இருந்து குதித்த நோயாளியால் அலறிய மருத்துவமனை!..பரபரப்பான நிமிடங்கள்,,!
மருத்துவமனையில் 8வது மாடியில் இருந்து கீழே குதித்த நோயாளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேற்கு வங்கத்தில் கல்கத்தாவில் உள்ள நரம்பியல் மருத்துவமனையில். சிகிச்சைக்காக சுதிர் அதிகாரி என்பவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் எட்டாவது மாடியில் உள்ள தனது வார்டு ஜன்னல் வழியாக வெளியே வந்து கட்டிடத்தின் முனையில் சென்று அமர்ந்துகொண்டார்.
இதை பார்த்த மருத்துவமனையில் உள்ளவர்கள் இதுபற்றிய தகவலை தீயணைப்புத் துறைக்கு தெரிவித்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் மற்றும் மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் அனைவரும் சேர்ந்து அந்த நோயாளியை கீழே கொண்டு வருவதற்கான முயற்சியில் முயற்சியை செய்தனர். ஆனால் அவர்கள் யாரையும் சுதிர் அவரின் அருகே நெருங்க விடவில்லை.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள், பெரிய ஏணி ஒன்றை கொண்டுவந்து அவரை கீழே இறக்க முயற்சி செய்தனர். ஆனால் ஏணியை பார்த்ததும் சுதீர் கீழே குதிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் அந்த முயற்சியும் கைவிடப்பட்டது. இதைப் பார்த்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இந்நிலையில் 1:10 மணியளவில் சுதீர் மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார். அப்பொழுது அவர் இரண்டு முறை கட்டிடத்தின் சுவரில் மோதி கீழே விழுந்துள்ளார். இதில் அவரது தலை மற்றும் இடுப்பு, இடது கை பகுதியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது, என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
எட்டாவது மாடி ஜன்னலுக்கு வெளியே வந்து அமர்ந்திருந்த சுதிர், யாரையும் தன் அருகில் நெருங்க விடவில்லை. கீழே குதித்த சுதிரின் நிலைமை மிகவும் மோசமடைந்துளதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் கூறினார்.