மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆற்றங்கரையோரம் கிடைத்த தங்கம் புதையலை தேடி குவிந்த மக்கள்... தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய முடிவு..!!
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பான்ஸ்லோய் ஆற்றங்கரையில் இருந்து, இரண்டு நாட்களுக்கு முன் தங்க ஆபரணங்களை ஒருவர் எடுத்துள்ளார். இதை தொடர்ந்து ஆற்றங்கரை ஓரம் பல இடங்களை தோண்டி பார்த்தபோது அவருக்கு தங்கம் கிடைத்துள்ளது. இந்த தகவல் அந்த பகுதியில் உள்ள மக்களிடம் காட்டுத்தை போல் பரவியது.
இந்த நிலையில் அந்தப் பகுதி மக்கள் ஆற்றங்கரையில் குவிந்தனர் கைகளாலும், மண்வெட்டியாலும் ஆற்றின் கரையை தோண்ட ஆரம்பித்தனர்.ஆற்றின் கரையில் மக்கள் தோன்றிய இடத்திலிருந்து, சிறிய அளவிலான பழைய நாணயங்களை போல் தோற்றமளிக்கும் தங்க பொருட்கள் கிடைத்துள்ளன. அதில் பழங்கால எழுத்துக்கள் மற்றும் அடையாளங்கள் இருக்கின்றன.
பார்கண்டி கிராமத்தில் உள்ள இந்த ஆற்றில் திடீரென தங்கம் எங்கிருந்து வந்தது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் ஒரு காலத்தில் இந்த ஆற்றின் அருகே மகேஷ்பூர் ராஜ்பரி என்ற நகரம் சுபர்ணரேகா நதியில் முழ்கியதாக நம்பப்படுகிறது. அப்போது அங்கு புதைந்த தங்கம் சுகர்னாரேகா நதி வழியாக பாண்ஸ்லோய் வந்திருக்க கூடும் என்று தகவல் பரவி வருகிறது. இதை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முராரி காவல் நிலையத்தில் ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட தங்க நாணயம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஆற்றங்கரையை சுற்றிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதி மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. மேலும் அந்த இடத்தை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர்