மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மதநிகழ்ச்சியில் பிரசாதம் சாப்பிட்ட 80 பேர் மருத்துவமனையில் அனுமதி.!
அசாம் மாநிலத்தில் கோயில் நிகழ்ச்சி ஒன்றில் பிரசாதம் சாப்பிட்ட 80 பேருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் உள்ள தேமாஜி மாவட்டத்திற்கு அருகே ஒரு கிராமத்தில் மத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிராமத்தை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். அப்போது அங்கு அனைவருக்கும் கருப்பு கொண்டைக்கடலை மற்றும் பச்சை பயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இந்த பிரசவத்தை சாப்பிட்ட உடனே பொதுமக்கள் பலருக்கும் வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த மருத்துவ குழு அருகில் உள்ள பள்ளியில் தங்க வைத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
மேலும் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 6 பேர் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.