மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என் பக்கத்தில் என் புருசனுக்கு பதிலாக வேறு யாரோ இருந்தாங்க ,அவமானத்தில் மனைவி, குடும்பத்தில் உண்டான புகைச்சல்.!
தெலுங்கானா மாநிலம் சூர்யபெட் மாவட்டத்தில் உள்ள கோடாட் என்ற பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் .இவர் தனது மனைவி பத்மா மற்றும் குழந்தையுடன் மாஸ் ஆடியோ விஷுவல்ஷ் என்ற நிறுவனத்தை சேர்ந்த போட்டோகிராபர் ஒருவருக்கு கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன்பு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கானா மாநில பத்திரிகைகளில் இரண்டு அரசு விளம்பரங்கள் வெளிவந்தது. அதில் ஒன்று இலவச கண்சிகிச்சை ,மற்றொன்று பயிர் காப்பீடு தொடர்பானது .
அதில் ஒரு விளம்பரத்தில் நாகராஜ் ,அவர் மனைவி மற்றும் குழந்தை ஆகியோரின் படம் இடம் பெற்றிருந்தது ஆனால் மற்றொரு விளம்பரத்தில் நாகராஜ் மனைவி பத்மா மற்றும் குழந்தை வேறொரு ஆண் நண்பருடன் நிற்பது போன்று புகைப்படம் இடம் பெற்றிருந்தது
மேலும் இதனால் நாகராஜ் குடும்பத்தில் பெரும் குழப்பம் உண்டாகி புகைச்சலை ஏற்படுத்தியது.இதை கண்ட கிராம மக்கள் கிண்டல் செய்தனர்.
இது மிகுந்த அவமானமாக உள்ளது எனவும், வெளியே தலைகாட்ட முடியவில்லை எனவும் நாகராஜ் வேதனையுடன் கூறியுள்ளார் .
இந்நிலையில் இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டு மாநில செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் புகைப்படம் எவ்வாறு மாறியது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .