#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நீங்கள் இருக்கும் இடத்தில் தான் எனக்கு பண்டிகையே... பிரதமர் நரேந்திர மோடியின் தீபாவளி கொண்டாட்டம்!!
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அந்த வகையில் இந்த வருடத்தின் தீபாவளி பண்டிகையை இமாசலப் பிரதேச மாநில எல்லை பகுதியில் உள்ள பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபாவளியை விமர்சையாக கொண்டாடிய உள்ளார்.
ராணுவ உடையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் நரேந்திர மோடி தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து ராணுவ வீரர்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி
நீங்கள் இருக்கும் இடத்தில் தான் எனக்கு பண்டிகையே. நான் பிரதமராக இல்லாத சமயத்திலும் தீபாவளியன்று ராணுவ வீரர்களை சந்தித்து உள்ளேன் என்று கூறியுள்ளார்.
மேலும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் இடம் கோயிலுக்கு நிகரான ஒன்று. நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு பூஜைகளிலும், நமது எல்லையை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கான பிரார்த்தனை நடைபெறுகிறது. ஒவ்வொரு வீடுகளிலும் ஒரு விளக்கு, அவர்களுக்காக ஏற்றப்படுகிறது என்று தெரிவித்தார்.