#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
₹40000/- ரூபாய்க்கு, 12 வயது சிறுமியை விலை பேசிய பெற்றோர்... காவல்துறை அதிரடி நடவடிக்கை.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் 40 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு 27 வயது நபருக்கு 12 வயது சிறுமியை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய பிரதேச காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய பிரதேசம் மாநிலம் போபால் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியை 40 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு 27 வயது நபருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் மஞ்சள் பூசும் விழாவின் போது மகளிர் மற்றும் குழந்தை வளர்ச்சி நலத் துறையைச் சார்ந்த அதிகாரிகள் காவல்துறைக்கு புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் கிராமப்புற போலீஸ் சூப்பிரெண்டு கிரண் லதா தலைமையில் விசாரித்தபோது அதிர்ச்சி அளிக்கும் உண்மைச் சம்பவம் வெளியாகி இருக்கிறது. தன்னை நாற்பதாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு அந்த நபருக்கு திருமணம் செய்து வைத்திருப்பதாக சிறுமி காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் அந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் அந்த 27 வயதை இளைஞரின் பெற்றோர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சிறுமியின் பெற்றோருக்கு 20000 ரூபாய் முன் பணம் கொடுக்கப்பட்டதாகவும் திருமணத்திற்குப் பிறகு மீதி 20 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுவதாக பேசி இருப்பதாகவும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சிறுமியை மீட்ட காவல்துறையினர் அந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் 27 வயதை இளைஞர் அவரது பெற்றோர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.