நள்ளிரவில் இளம்பெண்ணுடன் போலீஸ் ஜீப்பில் சுற்றித்திரிந்த இன்ஸ்பெக்டர்..! கடைசியில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்..
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கவிகோத்தகிரி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சினு. இந்நிலையில் சம்பவத்தன்று இன்ஸ்பெக்டர் சினு இரவு 11 மணியளவில் போலீஸ் ஜீப்பில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணுடன் உலா வந்துள்ளார்.
வெகு நேரமாக போலீஸ் ஜீப்பில் இருவரும் சுற்றி வந்துள்ளனர். அதன்பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஜீப்பை நிறுத்தி விட்டு இருவரும் பேசி கொண்டிருந்தனர். அதனை அவ்வழியாக வந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து கண்ணூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரேம் ராஜனுக்கு அனுப்பி வைத்தார்.
அதனை அடுத்து நடந்த சம்பவம் குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு பிரேம் விசாரணை நடத்தியதில் இருவரும் இரவில் ஜீப்பில் சுற்றித்திரிந்ததும், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் தனிமையில் இருவரும் பேசியது தெரியவந்துள்ளது. இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பிரேம்ராஜன், இன்ஸ்பெக்டர் சினுவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.