மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காலாவதியான கண் மருந்தை சிறுமிக்கு செலுத்திய மருத்துவர்கள்.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்.!
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் நகரில் வசித்து வருபவர் பிரகாஷ் (வயது 36). இவரின் மகள் கிருஷாலி (வயது 7). குழந்தை கிருஷாலி நேரு வீதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். நேற்று பள்ளியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில், கிருஷாலிக்கு பார்வை குறைபாடு இருப்பதாக மருத்துவ பரிசோதனை செய்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்று பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிரகாஷ் மகளை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு செல்லவே, மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் சிறுமியின் கண்களில் சொட்டு மருந்து போடப்பட்டுள்ளது.
சிறுது நேரம் மருத்துவமனையிலேயே சிறுமி அமரவைக்கப்ட்ட நிலையில், மருந்து குப்பியை எதேர்சையாக பிரகாஷ் பார்த்தபோது, கடந்த டிசம்பர் மாதம் காலாவதியான மருந்து குப்பி என்பது உறுதியானது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரகாஷ் மருத்துவர்களிடம் கேட்டபோது, மருந்து காலாவதியாகி 2 மாதம் தானே ஆகிறது. அதனால் பாதிப்பு இல்லை, போங்கள் என்று அலட்சியமாக தெரிவித்துள்ளனர்.
இதனால் பதறிப்போன பிரகாஷ் மருத்துவமனை வளாகத்தில் திடீர் போராட்டத்தை நடத்தினார். மேலும், மகளுக்கு பிற்காலத்தில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், அதற்கு மருத்துவமனை நிர்வாகமே பொறுப்பு, இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டார்.