மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இருசக்கர வாகனத்தில் வேகமாக செல்வதை தட்டிக்கேட்டதால் பயங்கரம்: கும்பலாக சேர்ந்து அப்பாவியை தாக்கிய கொடூரம்.!
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் நிரவி, மேல ஓடுதுறை அந்தோனியார் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஸ்டீபன் ராஜ் (வயது 28). இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் வேலை செய்து வருகிறார்.
நிரவி காமராஜர் நகரில் வசித்து வருபவர்கள் சிலம்பரசன், அவரின் நண்பர்கள் முகேஷ், நிஹாசன். இவர்கள் மூவரும் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றனர்.
இதனைக்கண்ட ஸ்டீபன் ராஜ் எதற்காக தெருவில் வேகமாக செல்கிறீர்கள்? குழந்தைகள் உள்ளது அல்லவா. விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய இயலும்? எனக் கண்டித்து இருக்கிறார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நால்வரும், ஸ்ரீபன் ராஜை அடித்து உதைத்த நிலையில், பொதுமக்கள் திரண்டதும் அவர்கள் மூவரும் தப்பிச் சென்றனர். ராஜை மீட்ட பொதுமக்கள் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல, காரைக்கால் கோட்டுச்சேரி தென்கரைப் பேட்டை பகுதியில் வசித்து வருபவர் மூவேந்தர் (வயது 30). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். அப்பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் உயிரிழந்த நிலையில், அவரின் இறுதி ஊர்வலம் கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்றுள்ளது.
கோட்டுச்சேரி சாலையில் ஊர்வலம் சென்ற சமயத்தில், அதே ஊரைச் சார்ந்த தமிழ்பாண்டியன் (வயது 21) என்பவர் சாலையில் நடனமாடியுள்ளார். இதனைக்கண்ட மூவேந்தர் சாலை நடுவே எதற்காக ஆடுகிறாய்? ஓரமாக ஆடலாமே என கேட்டுள்ளார்.
தமிழ் பாண்டியன், நீ யாருடா என்னை கேள்வி கேட்க? எனக் கூறி மூவேந்தனை கீழே தள்ளி இருக்கிறார். மேலும், செங்கலாலும் தாக்கியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் மூவேந்தன் புகார் அளிக்கவே, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.