மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டேய் நானும் சின்னபையன்டா.. என் கூட விளையாடுங்க.. சனீஸ்வரன் கோவில் யானை அட்ராசிட்டி.!
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால், திருநள்ளாறில் உலகப்புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சனிக்கிழமை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். அதனைப்போல, சனிப்பெயர்ச்சியின் போது இலட்சக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்வார்கள்.
கொரோனா பரவல் காரணமாக பக்தர்களின் வருகை குறைந்தளவே காணப்படும் நிலையில், கோவிலில் 17 வயதாகும் ப்ரக்ருதி என்ற பெண் யானை உள்ளது. இந்த யானை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வரும் நிலையில், பொதுமக்களிடம் மிகுந்து அன்புடன் பழகி வந்துள்ளது.
காரைக்காலில் உள்ள நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் யுவ பாரதி, நாராயணன் ஆகியோர் தினமும் கோவிலுக்கு வந்து செல்லும் நிலையில், யானையிடமும் அவ்வப்போது பழகி வந்துள்ளனர். இதனால் யானை பின்னாளில் சகோதரர்களை கண்டாலே குஷியாகி, அவர்களுடன் கண்ணாமூச்சி ஆட்டம் விளையாண்டு வந்துள்ளது.
சிறுவர்களை பார்த்ததும் குளத்தில் மூழ்கி ஒளிந்துகொண்டு, பின்னர் சிறுவர்களின் அழைப்புக்கேற்ப கரைக்கு வருகிறது. சிறுவர்கள் புறப்படும் போது பச்சிளம் குழந்தை மனதுடன் அவர்களை ஆசி செய்து வழியனுப்பியும் வைத்து வருகிறது. இதனைக்கண்ட பக்தர்களும், பொதுமக்களும் மெய்சிலிர்த்து போகின்றனர்.