மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கல்லூரி மாணவருடன் காதல், லிவிங் டுகெதர்.. ரூ.5 இலட்சத்தை சுருட்டி தலைமறைவானதால் பெண் பரிதவிப்பு.!
வேலை பார்க்க சென்ற பெண்ணும் - கல்லூரியில் படிக்க வந்த மாணவரும் காதல் வயப்பட்ட நிலையில், ஆசையாய் பேசி, உருகுவதுபோல நடித்து போலி காதலை வெளிப்படுத்திய இளைஞன் பெண்ணை துரோகத்தால் வீழ்த்தி ரூ.5 இலட்சத்துடன் கைவிட்டு சென்ற சம்பவம் நடந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள லாஸ்பேட்டை பகுதியில் வசித்து வரும் 23 வயது பெண்மணி, அழகு நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3 வருடத்திற்கு முன்னதாக ரெட்டியார்பாளையம் நகரில் செயல்பட்டு வந்த துணிக்கடையில் வேலைபார்த்து வந்துள்ளார். அப்போது, துணிக்கடையில் மேல்தளத்தில் தங்கியிருந்த கல்லூரி மாணவரான காரைக்காலை சேர்ந்த தினகரன் (வயது 24) பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது பின்னாளில் இவர்களுக்கு இடையே காதலாக மாறவே, இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், தினகரன் பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்து, அவரின் பெற்றோரிடம் வரன் கேட்டுள்ளார். அவர்களும் தினகரனுடன் பேசிவிட்டு, படிப்பு முடிந்ததும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, தினகரன் தங்கியிருந்த வீட்டிலேயே காதல் ஜோடி கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்த நிலையில், பல தருணங்களில் நெருங்கியும் இருந்துள்ளனர். இந்த தருணத்தில், கல்லூரியில் இறுதி வருட கட்டணம் செலுத்த வேண்டும் என பெண்ணிடம் தினகரன் பணம் கேட்க, பெண்மணியும் திருமணத்திற்கு என சேர்ந்து வைத்திருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார். காதலன் தன்னை கட்டாயம் கரம்பிடிப்பான் என பல்வேறு சூழ்நிலையில் பெண் மொத்தமாக ரூ.5 இலட்சம் வரை கொடுத்துள்ளார்.
தினகரனின் பிறந்தநாள் வருகையில் எனக்கு ஸ்மார்ட்போன் பரிசு வேண்டும் என கேட்டு, ரூ.55 ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும் தினகரன் பெற்றுள்ளார். இதன்பின்னர், படிப்பு முடித்ததும் காரைக்காலுக்கு தினகரன் சென்றுவிட, அவ்வப்போது போனில் பேசி காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் முதல் தினகரன் பெண்ணிடம் இருந்து விலக தொடங்கியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த பெண்மணி காதலனிடம் கேட்டபோது, எனக்கு உன்னை பிடிக்கவில்லை. நான் உன்னை திருமணம் செய்யமாட்டேன் என்று கூறியுள்ளார். காதலன் ஏமாற்றியதை தொடர்ந்து பெண் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.