மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போட்டாபோட்டி பயணம்.. தனியார் பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து.!
புதுச்சேரி நகரில் இருந்து அருகே உள்ள மாவட்டங்கள் மற்றும் கிராமப்புறங்களுக்கு அதிகளவில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த தனியார் பேருந்துகள் போட்டிபோட்டுக்கொண்டு பயணிப்பதும், அதனால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவதும் தொடர்கதையாகியுள்ளது.
இன்று புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து மடுக்கரைக்கு தனியார் பேருந்து புறப்பட்டு சென்றது. இந்த பேருந்துக்கு பின்னாலேயே நகர பேருந்து ஒன்றும் சென்றுகொண்டு இருந்தது. இந்த இரண்டு பேருந்துகளும் போட்டிபோட்டுக்கொண்டு பயணித்ததாக தெரியவருகிறது.
இந்நிலையில், இந்திரா காந்தி சிலை சாலையில் உள்ள கே.வி சில்க்ஸ் எதிர்புறம் இரண்டு பேருந்துகளும் அடுத்தடுத்து மோதி விபத்திற்குள்ளானது. முன்னால் சென்ற பேருந்து திடீரென நிறுத்தப்பட்டதால், பின்னால் வந்த பேருந்தும் முன்னால் சென்ற பேருந்தை மோதியுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் பேருந்தில் பயணித்தவர்கள் பலரும் படுகாயம் அடைந்தனர்.