மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
3 பேர் கும்பலால், இரண்டு நாட்கள் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: மதுவை ஊற்றி கொடுத்து நடந்த பயங்கரம்.. புதுச்சேரியில் அதிர்ச்சி..!
புதுச்சேரி மாநிலத்தைச் சார்ந்த இளம்பெண், மனநலம் பாதிக்கப்பட்டு தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு அக்கா இருக்கிறார்.
சம்பவத்தன்று தனது பெற்றோரிடம் சண்டையிட்டு அக்காவை பார்ப்பதற்காக சென்றுள்ளார். புதுச்சேரி பேருந்து நிலையத்தில், பேருந்தில் பயணம் செய்ய பணம் இல்லாமல் தவித்து இருக்கிறார்.
அவர் தனியாக இருப்பதை பார்த்த மூன்று இளைஞர்கள், பணம் கொடுத்து உதவுவதாக கூறி தங்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு இரண்டு நாட்கள் மதுபானம் கொடுத்து மூன்று பேர் கொண்ட கும்பல் பலாத்கார செயலில் ஈடுபட்டு இருக்கிறது.
அவர்களின் பிடியில் இருந்து தப்பி வந்த பெண்மணி, இது குறித்து வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார்.
அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட 3 இளைஞர்களுக்கு வலை வீசி இருக்கின்றனர்.