நான் ஜனாதிபதி ஆவேன் என கனவில் கூட நினைத்தது இல்லை.! மண்ணை தொட்டு கும்பிட்டு பேசிய ராம்நாத் கோவிந்த்.!



President ramnath Kovind speech his village

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தர பிரதேசத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தநிலையில் இன்று அவரது சொந்த ஊரான கான்பூர் தேஹாத் மாவட்டத்தில் உள்ள பராங்கு கிராமத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்தார். தான் பிறந்த ஊருக்கு வந்ததும் மண்ணை தொட்டு வணங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.

இதனையடுத்து அங்கு நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார். அப்போது அவர் கூறுகையில், நாடு முழுவதும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. கொரோனாவிலிருந்து நம்மை காக்கும் பேராயுதம் தடுப்பூசி தான். இதனால், அனைவரையும் தடுப்பூசி போட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இந்த மண்ணின் வாசனையை உணர்ந்ததும், இந்த கிராமத்து மக்களின் நினைவுகள் வருகின்றன. அவர்கள் எப்போதும் எனது நினைவில் உள்ளவர்கள்.

தான் இன்று இருக்கும் நிலைக்கு காரணம், விடுதலை போராட்ட வீரர்கள், அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய குழுவில் இடம் பெற்றிருந்தவர்களின் பங்களிப்பு மற்றும் தியாகம், இந்த கிராமம், இந்த மக்கள் அனைவரின் அன்பு தான் என்று குறிப்பிட்டார். இங்கிருந்து தான் நாட்டிற்கு சேவை செய்யவும், முன்னேறவும் ஊக்கம் கிடைத்தது. இந்த கிராமத்தில் பிறந்த சாதாரண மனிதனான நான், நாட்டின் உயிரிய பதவியில் அமர்ந்து கடமையாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் எனு கற்பனை செய்து கூட பார்த்தது கிடையாது என தெரிவித்தார்.