மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உலகளவில் அதிகரித்த இந்திய செல்வாக்கு.. பிரதமர் மோடி பெருமிதம்.!
மராட்டிய மாநிலத்தில் உள்ள புனே நகரில் சிபியோசிஸ் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது, "உக்ரைனில் தவித்து வரும் இந்தியர்களை ஆபரேஷன் கங்கா திட்டம் மூலமாக நாம் தாயகம் அழைத்து வருகிறோம். கொரோனா பரவலின் போதும் அதனை வெற்றிகரமாக எதிர்கொண்டோம். பல்வேறு நாடுகளே உக்ரைனில் தவிக்கும் தங்கள் நாட்டு குடிகளை மீட்க இயலாமல் தவிக்கிறது.
உலக அரங்கில் இந்தியாவிற்கு அதிகரித்து வரும் செல்வாக்கு காரணமாக, அங்குள்ள இந்தியர்களை நாம் எளிதில் மீட்டு வருகிறோம். தற்போது வரை 13,700 பேர் இந்தியாவுக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.