நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த தனியார் பேருந்து.. 5 பேர் பலி.!



Private-bus-catches-fire-in-Karnataka-5-killed

கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஹிரியூர் பகுதியில் இன்று காலை திடீரென தனியார் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதாவது கே.ஆர்.ஹல்லி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று சுமார் 32 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட என்ஜின் கோளாறு காரணமாக தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.

இந்த தீவிபத்தில் இரண்டு குழந்தைகள், ஒரு பெண் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்கள் மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து ஹிரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.