53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
8 வயது மகளை கழுத்தறுத்து கொலை.! பின்பு தானும் தற்கொலை செய்த பேராசிரியர்.! அதிர்ச்சி சம்பவம்.!
ஹரியானாவைச் சேர்ந்த சந்தீப் கோயல்(35), லாலா லஜபதி ராய் பல்கலைக்கழகத்தில் கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பிரிவில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். தனது மனைவி மற்றும் 8 வயது மகளுடன் பல்கலைக்கழகத்திற்கு அருகிலேயே வசித்து வந்தார்.
கடந்த சில நாட்களாகவே சந்தீப் கோயலுக்கு கடுமையான மன உளைச்சல் இருந்து வந்துள்ளது. அதற்காக அவர் மனநல மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று, அதற்குரிய மாத்திரைகளை உட்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் பல்கலைக்கழகத்தில் ஒரு வேலை இருப்பதாக கூறி தனது மகளையும் அழைத்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பல மணி நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவரது மனைவி சந்தீப்பை தேடி பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளார். பாதுகாவலர்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சந்தீப்பும் அவரது 8 வயது மகளும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர் .
சம்பவம் அறிந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சந்தீப் கோயல் முதலில் தனது மகளை கழுத்தை அறுத்துக் கொன்று விட்டு, பின்பு தானும் தற்கொலை செய்து இறந்திருக்கக்கூடும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.
இறந்த இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மன உளைச்சல் காரணமாக இவ்வாறு செய்திருக்கிறாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.