காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
குஜராத்தில் பப்ஜி கேமிற்கு தடைவிதித்து அதிரடி உத்தரவு; விரைவில் நாடு முழுவதும்!
குஜராத் மாநில அரசின் பரிந்துரையின் பேரில் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து ஆரம்ப பள்ளிகளிலும் பப்ஜி மொபைல் கேம் விளையாட தடைவிதிக்க வேண்டி ஆரம்ப பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
உலகம் முழுவதும் இன்று பிரபலமாக பேசப்படும் மொபைல் கேம் பப்ஜி. பள்ளி மாணவர்கள் முதல் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் வரை பலரும் இந்த கேமினை விளையாடி வருகின்றனர். பலர் இதற்கு அடிமையாகவே உள்ளனர் என்று கூட கூறலாம்.
மேலும் இந்த விளையாட்டால் மாணவர்களுக்கு பலி உணர்ச்சி அதிகரிக்கிறது என்றும் அவர்களின் படிப்பு வீணாகிறது என்றும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மிகுந்த கவலையில் உள்ளனர். அவர்களை தடுக்க முயலும் போதும் கண்டிக்கும் போதும் சிலர் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு சென்றுவிடுகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு கூட ஜம்மு & காஷ்மீரில் சரியாக படிக்காமல் பப்ஜி கேம் விளையாடியதை கண்டித்ததற்காக பள்ளி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் குஜராத் மாநில குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் ஆரம்ப பள்ளிகளில் உள்ள மாணவர்கள் பப்ஜி மொபைல் கேமினை விளையாட முற்றிலும் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவானது மாவட்ட நிர்வாகம் மூலம் அனைத்து ஆரம்ப பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனைத்தொடர்ந்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைச்சகமும் இந்த பப்ஜி கேமினை தடைவிக்கும்படி பரிந்துரை செய்து அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கூடிய விரைவில் நாடு முழுவதும் இந்த பப்ஜி கேம் தடைசெய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.