விடாமுயற்சி படத்தின் முக்கிய அப்டேட்.. ரசிகர்கள் மகிழ்ச்சி..!
என் பொண்டாட்டிய ஊருக்கு அனுப்புங்க.. பப்ஜி காதல்.. நாடு தாண்டிய மனைவிக்காக கணவன் கோரிக்கை.!
பாகிஸ்தானைச் சேர்ந்த 30 வயதான சீமா ஹைதர் என்ற பெண் பப்ஜி விளையாட்டில் தனக்கு பழக்கமான 25 வயது இந்திய இளைஞர் சச்சினுடன் வாழ்வதற்காக தனது நான்கு குழந்தைகளுடன் நேபாளம் வழியாக சட்டத்திற்கு புறம்பான வகையில் இந்தியாவிற்கு நுழைந்தார்.
இந்த சம்பவம் குறித்த செய்திகள் ஊடகங்கள் மூலம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது காதலன் சச்சினுடன் நொய்டாவின் சீமா ஹைதர் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் இருவரையும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
அவர்களது குழந்தைகளையும் போலீஸ் காவலில் எடுத்தனர். இந்த வழக்கில் அவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில் அவர்கள் குறித்த பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவத் துவங்கியது.
Seeing Pakistani woman Seema and Sachin back at home in Noida, India, her husband Ghulam Haider has issued a video from Saudi Arabia demanding his wife and kids are sent back to him. 👇 pic.twitter.com/J3S6qyhcMf
— Ashni Dhaor (@DhaorAshni) July 8, 2023
இந்த நிலையில், தற்போது சீமா ஹைதரின் கணவர் குலாம் ஹைதர் சவுதி அரேபியாவில் இருந்து ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று கோரிக்கையை வைத்துள்ளார்.