எந்த நேரமும் செல்போன்.. பெற்றோர் கண்டித்ததால் நடந்த விபரீதம்.. கண்ணீர் சோகம்.!
பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்து, பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள ஞானப்பிரகாசம் நகரில் வசித்து வருபவர் கோவிந்தராஜன். இவருக்கு லோகேஸ்வரி என்ற ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில், லோகேஸ்வரி தனது செல்போனில் அதிகநேரம் யாருடனோ பேசிக் கொண்டே இருந்துள்ளார்.
இதனால் எங்கு தன் மகளின் வாழ்க்கைக்கு பிரச்சனை வந்துவிடுமோ என்ற நல்லெண்ணத்தில், ஏன் எப்பொழுதும் போனில் பேசிக் கொண்டே இருக்கிறாய்?, யாருடன் பேசிக் கொண்டிருக்கிறாய்? என்று கண்டித்ததால் மனமுடைந்து போன பெண்ணுக்கு எதற்கெடுத்தாலும் சந்தேகமடைந்து தன்னை கேள்வி கேட்கிறார்கள் என்ற விரக்தி ஏற்பட்டுள்ளது.
மேலும், 'எப்பொழுதும் சந்தேக காணோட்டத்திலேயே பார்க்கிறார்களே, நாம் தற்கொலை செய்துகொண்டால் என்ன?' என்ற விபரீத எண்ணம் எழவே, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் லோகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த விஷயம் தெரியாமல் வெளியில் சென்ற பெற்றோர் வீட்டிற்கு வந்தபோது, லோகேஸ்வரி தூக்கிட்ட நிலையில் இருந்ததை கண்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.
அத்துடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் தீவிர சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.