#SextortionCase: பக்கா டிரைனிங்., 2,500 பேருடன் கிராமமே பலான தொழில்.. தீரன் திரைப்பட பாணியை மிஞ்சும் பரபரப்பு சம்பவம்.! இந்தியாவே அதிர்ச்சி..!!



Pune Youngster Suicide Investigation Sextortion Gang Lead Arrested Rajasthan by Pune Police

 

ஆபாச சேட்டிங் செய்து நிர்வாண படத்தை பெற்று மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை சேர்த்தவர் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் அம்பலமாகியுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே துட்டவாடி காவல் எல்லைக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் சகோதரியுடன் வசித்து வந்த 19 வயது இளைஞர், கடந்த அக்டோபர் மாதத்தில் 12ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அவரின் சகோதரி காவல் நிலையத்தில் புகார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த காவல் துறையினர் விசாரணையை முன்னெடுத்தனர். 

அப்போது, இளைஞரின் இன்ஸ்டாகிராம் கணக்கில் பிரீத்தி என்ற பெயருடைய பெண்ணின் பேச்சுக்களை சோதனை செய்தபோது, இளைஞர் Sextortion என்று அழைக்கப்படும் பாலியல் மிரட்டல் பிரச்சனையில் சிக்கி தற்கொலை செய்துகொண்டது அம்பலமானது. Sextortion என்பது போலியான கணக்குகளில் இளைஞர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்தி, அவர்களின் ஆசையை தூண்டி நிர்வாண புகைப்படங்களை பெற்றுக்கொண்டு பணம் கேட்டு மிரட்டுவது ஆகும். 

Pune

சம்பந்தப்பட்ட இளைஞர் மேற்கூறிய பிரச்சனையில் சிக்கியிருப்பதை அவரின் நண்பரும் காவல் துறையினரிடம் தெரிவித்து இருக்கிறார். இதனால் அவர் பிரீத்தி என்ற போலியான முகநூல் கணக்கு வைத்தவரிடம் சிக்கி, நிர்வாணமாக வீடியோ கால் பேசியபோது அவரின் போட்டோ பதிவு செய்யப்பட்டு மிரட்டப்பட்டது அம்பலமானது. முதலில் அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்த இளைஞரிடம் மேற்படி பணம் இல்லாத காரணத்தால் கொடுக்க முடியவில்லை. 

இதனால் ஆத்திரமடைந்த எதிர் தரப்பு அவரது நிர்வாண புகைப்படத்தை பதிவு செய்யவே, அதிர்ச்சியடைந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து, போலியான இன்ஸ்டா கணக்கை உபயோகம் செய்தவர் தொடர்பான தகவலை சேகரித்த காவல் துறையினர், இளைஞர் பணம் அனுப்பி வைத்த வங்கிக்கணக்கை கண்டறிய தொடங்கியுள்ளனர். 

Pune

சம்பந்தப்பட்ட வங்கிக்கணக்கு இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள லக்ஸ்மன்கர்க் மாவட்டத்தின் குருகோதடி கிராமத்தை சேர்ந்த அன்வர் சுபன் கான் என்பவரை கைது செய்தனர். இவரை அதிகாரிகள் கைது செய்ய சென்றபோது, உள்ளூர் மக்கள் அனைவரும் காவல் துறையினருக்கு எதிராக இருந்துள்ளனர். மேலும், அவர்களின் மீது கல்வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 2 புனே காவல் துறையினர் காயமும் அடைந்தனர். 

முக்கிய குற்றவாளியை கைது செய்ய விடாமல் அவரது குடும்பத்தினரும், கிராம மக்களும் தடுத்துள்ளனர். இதனால் 2 கி.மீ தூரம் குற்றவாளியை துரத்தி சென்று புனே காவல்துறை கைது செய்துள்ளது. தீரன் அதிகாரம் ஒன்று திரைப்பட பாணியில் Sextortion குற்றவாளிகளை பிடிக்க சென்ற காவல் துறையினருக்கு தாக்குதலும் நடந்துள்ளது. 

Pune

தற்போது கைது செய்யப்பட்டவரை போல பல கும்பல்கள் இந்தியா முழுவதும் இயங்கி வருகிறது. இவர்கள் கிராமங்களில் உள்ள மக்களின் ஏழ்மை நிலை, அறியாமை போன்றவற்றை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தவறுகள் செய்வதற்கு பயிற்சியும் கொடுக்கின்றனர். ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ள அன்வர் சுபாஷ் ஒரு துருப்பு சீட்டு என்பது தான் நிதர்சனம். அவரை போல பல கும்பல் இருக்கின்றன. இதில் 2,500 பேர் கொண்ட கிராமமே போலியான கணக்கில் பலரை ஏமாற்றி வந்தது அம்பலமாகியது தான் அதிர்ச்சி தரும் விஷயமாக அமைந்துள்ளது.

மேலும், முகநூலில் ஒளிபரப்பாகிய பல ஆபாச விடீயோக்கள் இங்கிருந்தே பதிவு செய்யப்பட்டு இளைஞர்களை தூண்டில் போட்டு பிடிக்க உபயோகம் செய்யப்பட்டுள்ளது. இவர்களின் கணக்குகளை பார்த்து ரசித்து வலையில் சிக்கும் நபர்களை ஆண் / பெண் பேதமின்றி அவர்களும் ஆண் / பெண்ணாக சேர்ந்து பணம் கேட்டு மிரட்டி தற்கொலை வரை அழைத்து சென்றுள்ளனர். கிராமமே சேர்ந்து இவ்வாறான செயலில் ஈடுபட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.