மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மொட்டை மாடியில் ஒர்கவுட் ஹிண்ட்.. தினமும் உடற்பயிற்சி செய்து அசத்தும் சிறுமி.!
உடற்பயிற்சி என்பது ஒவ்வொருவரும் தங்களின் உடல்நலத்தை பாதுகாக்க கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய ஒன்றாகும். அன்றைய காலங்களில் சத்தான உணவுகளை சாப்பிட்டு, கிடைத்த நேரங்களில் நன்றாக விளையாண்டு வந்ததால் பலரின் உடலும் தேக்குபோல இருக்கும்.
ஆனால், இன்றளவில் சரிவர சாப்பிடாமல் இருத்தல், மாறிவரும் வாழ்க்கைமுறை, செல்போன் ஆதிக்கம் போன்றவற்றால் பலரும் உடல் நலத்தை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். உடற்பயிற்சியும் செய்யாமல் இருப்பதால், அவர்கள் இளம் வயதிலேயே பல பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர்.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சிறுமி தனது வீட்டின் மொட்டை மாடியில் தினமும் உடற்பயிற்சி செய்கிறார். அவர் செய்யும் உடற்பயிற்சியை அடுத்தடுத்து மேற்கொள்ளும் வகையில், மொட்டைமாடியில் அதற்கான குறியீடுகளையும் இட்டு ஒவ்வொரு உடற்பயிற்சியாக வரிசையாக செய்து வருகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Watch Video Click Here: https://www.facebook.com/watch/?v=667595754378573