மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கர்நாடகாவில் 136, மத்திய பிரதேசத்தில் 150..! டார்கெட் வைத்து கர்நாடக பார்முலாவை கையில் எடுக்கும் ராகுல் காந்தி..!
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையக 136 தொகுதிகளில் வெற்றி அடைந்து ஆட்சியை பிடித்தது.
இந்த தேர்தல் வெற்றி பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்ற மகிழ்ச்சியுடன் காங்கிரஸ் கட்சியினர் இருக்கின்றனர். தற்போது மத்திய பிரதேசம் மாநிலத்தில் 2023 நவம்பரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
அதற்காக மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தயாராகி வரும் நிலையில், ராகுல் காந்தி இதுகுறித்து பேசினார். அவர் கூறுகையில், கர்நாடகாவில் நாங்கள் 136 இடங்களில் வெற்றி அடைந்தோம். மத்திய பிரதேசத்தில் 150 தொகுதிகளை கைப்பற்றுவோம் என பேசினார்.