மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாஜகவின் வெறுப்புணர்வை அகற்றவே பாதையாத்திரை - நடைபயணம் குறித்து மனம்திறந்த ராகுல்காந்தி.!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் இருந்து புதுடெல்லி வரை நாட்டை ஒற்றுமைப்படுத்த பாதையாத்திரை தொடங்கினர். கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய பாதையாத்திரை ஒவ்வொரு மாநிலமாக நடந்து டெல்லியில் முடிந்துள்ளது.
இந்த நடைப்பயணத்தின் இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் கமல் ஹாசன், தனது சார்பில் இன்று சிறப்புரையாற்றி இருந்தார். அதனைத்தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "பாஜக இந்தியாவில் இந்து - முஸ்லீம் வெறுப்புணர்வு பிரச்னையை ஏற்படுத்தி வெறுப்பை விதித்துள்ளது.
இந்த வெறுப்புணர்வை அகற்றுவதற்காக பாதையாத்திரை பயணத்தை தொடங்கினேன். எனது பயணத்திற்கு மக்கள் நல்ல ஆதரவு கொடுத்துள்ளார்கள். நிச்சயம் அனைத்தும் ஒருநாள் மாறிவிடும். மாற்றத்திற்காக காத்திருப்போம்" என்று பேசினார்.