குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
கண்ணாமூச்சி விளையாட்டால் விபரீதம்: ப்ரீசரில் ஒளிந்து உயிரைவிட்ட இளம் சகோதரிகள்.! பெற்றோர்களே விழிப்புடன் இருங்கள்.!
ராஜஸ்தான் மாநிலம், ராஜ்சமந்தி பகுதியில் வசித்து வரும் சிறுமிகள் ரிதிகா (வயது 11), பாயல் (வயது 10). உறவினர்களான இருவரும், சகோதரிகள் ஆவர். சம்பவத்தன்று கண்ணாமூச்சி ஆடியிருக்கின்றனர். அப்போது, இருவரும் ப்ரீசரில் மறைந்து இருந்துள்ளனர்.
வீட்டில் பயன்படுத்தப்படாமல் இருந்த ப்ரீஸருக்குள் சென்ற சகோதரிகளுக்கு மீண்டும் வெளியே வர தெரியவில்லை. இதனால் இருவரும் உள்ளேயே மாட்டிக்கொண்டு பரிதாபமாக மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
விளையாடிக்கொண்டு இருந்த குழந்தைகள் மாயமானதாக பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இறுதியாக ப்ரீசரில் பார்த்தபோது உண்மை அம்பலமாகியுள்ளது.
அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தபோது, இருவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர் தங்களின் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நல்லது.