திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தனியார் பள்ளி பேருந்து - பயணிகள் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து: பள்ளி மாணவி உட்பட இருவர் பலி., 15 பேர் படுகாயம்.!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் மாவட்டத்தில், இன்று அமரபுரா - கார்கேடி பகுதியில் சாலை விபத்து நடந்தது. இந்த விபத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். முதற்கட்ட விசாரணையில், பள்ளிக்கு சொந்தமான தனியார் பேருந்தும், பயணிகள் தனியார் பேருந்தும் மோதி விபத்தில் சிக்கியது தெரியவந்தது.
இவ்விபத்தில் பள்ளி பேருந்தின் ஓட்டுநர் ககன் ஜாட், 15 வயதுடைய மாணவி என இருவர் பரிதாபமாக பலியாகினர். 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் வருவது தெரியாமல், தொடர்ந்து வேகத்திலேயே பேருந்து இயக்கப்பட்டது விபத்திற்கு காரணமாகியுள்ளது.