#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
40க்கும் மேற்பட்ட சிறுமிகளின் அந்தரங்க வீடியோ... இணையதளத்தில் பரப்பிய இசைக்கலைஞர்.!
நாடெங்கிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நாட்டையே உலுக்கும் வகையில் ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
அந்த மாநிலத்தைச் சார்ந்த இளைஞர் ஒருவர் 40க்கும் மேற்பட்ட சிறுமிகளை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறது ராஜஸ்தான் காவல்துறை.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் குமார். ட்ரம்ஸ் இசைக் கலைஞரான இவர் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் இசை கச்சேரிகளை நடத்துவார். அப்போது நிகழ்ச்சிகளுக்கு வரும் இளம் பெண்களிடம் குறிப்பாக சிறுமிகளிடம் அவர்களது செல்போன் எண்களை வாங்கிக் கொள்வார். பின்னர் அவர்களுடன் நட்பாக பழகி வீடியோ சாட் செய்து அதில் இருக்கும் காட்சிகளை ஸ்கிரீன் ரெக்கார்டிங் முறையில் படம் எடுத்து வைத்துக் கொள்வார்.
பின்னர் அவற்றை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களிலும் இணையதளத்திலும் பரப்பி இருக்கிறார். அதனை வைத்து அவர்களை மிரட்டி பணமும் சம்பாதித்துள்ளார். சமீப காலமாக அப்பகுதியில் உள்ள சிறுமிகளின் ஆபாச புகைப்படங்கள் இணையதளத்தில் பரவியதை தொடர்ந்து இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறை இவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் இவரது செல்போன் மற்றும் பென்டிரைவில் இருந்து சிறுமிகளின் ஆபாச படங்கள் கைப்பற்றப்பட்டன. இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவரது தொல்லையால் ஒரு தாயும் சிறுமியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நடந்து இருக்கிறது.