"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
ஹீட்டரில் தீப்பிடித்து பயங்கரம்; வீட்டில் உறங்கிய தந்தை, 3 மாத பிஞ்சு பரிதாப பலி.!
இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள காய்ர்தால்-டிஜாரா மாவட்டம், சேக்ஹபூர் பகுதியை சேர்ந்தவர் தீபக் யாதவ். இவரின் மனைவி சஞ்சு. தம்பதிகளுக்கு நிஷிகா என்ற 3 மாதமாகும் கைக்குழந்தை இருக்கிறது.
இந்நிலையில், இவர்கள் மூவரும் கடந்த டிசம்பர் 23ம் தேதி வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்தனர். அச்சமயம், ஹீட்டரில் இருந்து வீட்டில் தீ பரவியதாக தெரியவருகிறது.
வீட்டின் அறைகளில் தீ மளமளவென பற்றியதைத்தொடர்ந்து, தீயின் பிடியில் சிக்கிய தீபக் மற்றும் அவரின் கைக்குழந்தை உயிருடன் எரிந்து உடல் கருகி பலியாகினர்.
சஞ்சு படுகாயத்துடன் உயிருக்காக வீட்டில் அலறித்துடித்துள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், வீட்டின் கதவை உடைத்து துரிதமாக செயல்பட்டு சஞ்சுவை மீட்டனர்.
மேலும், தந்தை மற்றும் மகளின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, இருவரின் மரணமும் உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.