பாம்பு பிடித்தபோது நாகப்பாம்பு கடித்ததில் சில நிமிடங்களில் உயிரிழந்த நபர்!! வைரல் வீடியோ..
பாம்பு பிடி வீரர் ஒருவர் பாம்பு பாம்பு கடித்து அடுத்த சில நிமிடங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் Churu மாவட்டத்தை சேர்ந்தவர் பாம்பு பிடி வீரர் வினோத் திவாரி. 45 வயதாகும் இவர் கடந்த 20 ஆண்டுகளாக பாம்பு பிடிப்பதில் பிரசித்தி பெற்றவர். அந்த பகுதியில் பாம்பு பிடிக்கவேண்டும் என்றால் வினோத் திவாரிதான் மக்களின் முதல் தேர்வாக இருந்துவந்துள்ளது.
இந்நிலையில் நாகபாம்பு ஒன்றை பிடிப்பதற்காக தனது உதவியாளருடன் வினோத் திவாரி சென்றுள்ளார். பாம்பை பிடித்து அதனை பைக்குள் போடும்போது நாகம் வினோத் திவாரியின் கையில் சீண்டியுள்ளது. இதனை பார்த்து அருகில் இருந்தவர்கள் பதறியபோதும், எந்த ஒரு பயமும் இல்லாமல் வினோத் திவாரி அமைதியாக பாம்பை பைக்குள் போட்டு அங்கிருந்து எடுத்துச்சென்றுள்ளார்.
பாம்பை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்ற வினோத் திவாரி அதே இடத்தில் மயக்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த பரிதாபகரமான காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
#NDTVBeeps | On Camera, Rajasthan's 'Snake Man' Dies Minutes After Being Bitten By A Cobra pic.twitter.com/JRzig3Azuu
— NDTV (@ndtv) September 14, 2022