மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணத்திற்கு வந்த 5 வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம்: 22 வயது இளைஞரின் அதிர்ச்சி செயல்.!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டோங்க் மாவட்டத்தில் நடைபெற்ற உறவினரின் திருமண விழாவுக்கு, 5 வயதுடைய பெண் குழந்தை தனது பெற்றோருடன் வருகை தந்துள்ளார்.
இந்நிலையில், சிறுமியின் உறவினரான சிவராஜ் பைரவா (வயது 22) என்பவர், சிறுமியை வீட்டின் மாடிக்கு தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அவரை அங்கேயே விட்டுவிட்டு சிவராஜ் vanthuvida, சிறுமியை காணாது தேடிய குடும்பத்தினர் மாடியில் வைத்து அவரை மீட்டனர். மேலும், சிறுமியின் பிறப்புறுப்பு பகுதியில் காயங்கள் இருந்ததால், அவர் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகித்தனர்.
இதனையடுத்து, உடனடியாக சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தவர்கள், அங்கு சிகிச்சைக்குப்பின் நடத்திய விசாரணையில் சிவராஜின் செயல் அம்பலமானது.
உண்மையை அறிந்த குடும்பத்தினர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சிவராஜ் பைரவாவை கைது செய்தனர்.