மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனியார் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 19 வயது இளம்பெண் பரிதாப பலி; தந்தை கண்முன் நடந்த சோகம்.!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன். வேலூரில் இருந்து பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரப்பாக்கம் நோக்கி தனது இரண்டு மகளுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளார்.
அச்சமயம் பெருமுகப் பகுதியில் பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்துள்ளன. இதனால் இருசக்கர வாகனத்தை குறைந்த வேகத்தில் வெங்கடேசன் இயக்கிய நிலையில், அவ்வழியாக வந்த தனியார் பேருந்து வெங்கடேசனின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து மூவரும் தவறி கீழே விழுந்துவிட்ட நிலையில், அவரின் இரண்டாவது மகள் ஸ்வேதா மீது பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. இந்த சம்பவத்தில் ஸ்வேதா தனது தந்தை மற்றும் சகோதரி கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த சத்துவாச்சாரி காவல்துறையினர் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.