#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்த பிரச்சனைதான் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரிலிருந்தே விலக காரணமாம்..? சிஎஸ்கே உரிமையாளர் பரபரப்பு பேட்டி..!
சிஎஸ்கே அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகதான் சிஎஸ்கே அணி வீரர் சுரேஷ் ரெய்னா அணையில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டு தற்போது அடுத்த மாதம் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதனையடுத்து அனைத்து அணி வீரர்களும் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுவிட்டனர்.
முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடவுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து ஐபிஎல் ரசிகர்களும் ஐபில் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்துள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் உத்தரபிரதேசத்தில் உள்ள சுரேஷ் ரெய்னாவின் மாமா கொலை செய்யப்பட்டதுதான் அவர் ஐபிஎல் போட்டியில் இருந்து விலக காரணம் என செய்திகள் வெளியானது. ஆனால் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் என்.சீனிவாசன் அவர்கள் பிரபல தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு கொடுத்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் பேசியதில், "சில கிரிக்கெட் வீரர்கள் பழைய நடிகர்களைப் போல் நடந்து கொள்வதாகவும், சில நேரங்களில் அவர்களின் வெற்றி தலைக்கு சென்று விடுவதாகவும் கூறியுள்ளார். மேலும் வீரர்கள் அணியில் இருப்பது மகிழ்ச்சியாக இல்லை என்றால் அவர்கள் தாராளமாக அணியிலிருந்து போகலாம், நான் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என கூறியுள்ளார்".
மேலும் சுரேஷ் ரெய்னா இழக்கப்போகும் பணம் குறித்து அவருக்கு தற்போது தெரியவில்லை என்றும் விரைவில் அதை அவர் புரிந்து கொள்வார் எனவும் சீனிவாசன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சுரேஷ் ரெய்னா தனக்கு ஒதுக்கப்பட்ட ஹோட்டல் அறை குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்ததாகவும், தோனியின் அறை போல தனக்கும் அறை ஒதுக்க வேண்டும் என சுரேஷ் ரெய்னா கேட்டதால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே அவர் அணியில் இருந்து விலகி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகிவருகிறது.