மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கேரளாவில் நடந்த விமான விபத்து! 3 வயது குழந்தையை மீட்ட மீட்பு குழுவிவினர்!
துபாயில் இருந்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரவு 7.40 மணிக்குதுபாயில் இருந்து 191 பேருடன் கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் தரையிறங்கிய போது விமானம் கீழே விழுந்து இரண்டு துண்டுகளாக உடைந்தத்தில் தற்போதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விமான விபத்தில் விமானி உள்பட 19 பேர் பலி ஆனார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு போலீசார், தீயணைப்பு வீரர்கள், விமான நிலைய அதிகாரிகள் மற்றும் மீட்புக்குழுவினர் காயமடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அந்த விமானத்தில் குழந்தைகளும் பயணித்துள்ளனர். இந்தநிலையில் இந்த விமான விபத்தில் தப்பி பிழைத்த 3 வயது குழந்தையை போலீசார் மீட்டுள்ளனர். அந்த குழந்தை விபத்து ஏற்பட்டதால் அதிர்ச்சியில் இருந்ததாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். இதனையடுத்து குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவர்கள் முதலுதவி செய்தனர்.