மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அமலானது ரிசர்வ் வங்கியின் உத்தரவு.. ஏ.டி.எம் கட்டண தொகை அதிகரிப்பு.!
வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் தங்களின் கணக்கு இருக்கும் வங்கி ஏ.டி.எம் மூலமாக மாதம் 5 முறையும், பிற வங்கி ஏ.டி.எம்மில் மாதம் 3 முறையும் இலவசமாக பணம் எடுத்தல் உட்பட பிற பரிவர்த்தனையை மேற்கொள்ள இயலும்.
இந்த முறைகளுக்கு மேல் நடக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூல் செய்யப்படும். அந்த வகையில், அனுமதி செய்யப்பட்ட இலவச பரிமாற்றத்திற்கு மேல் நடைபெறும் பிற பரிவர்தனைகளுக்கு ரூ.20 கட்டணமாக பிடித்தம் செய்யப்படும்.
இந்த கட்டண ஜனவரி 1 ஆம் தேதியான இன்று முதல் உயர்த்தப்படுகிறது. இதன்படி, பிடித்தம் செய்யப்படும் தொகை ரூ.20 இல் இருந்து ரூ.21 ஆக உயர்த்தப்படுகிறது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஏ.டி.எம் இயந்திர பராமரிப்பு, பாதுகாப்பு உட்பட பல்வேறு செலவினத்திற்கு கூடுதல் நிதி தேவைப்படும் காரணத்தால், இந்த தொகை அதிகரிக்கப்பட்டுள்தாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.