திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வேகமாக வந்த லாரி மீது ஆட்டோ மோதி விபத்து... படுகாயமடைந்த பள்ளி மாணவர்கள்!!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ஆர்டிசி பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்கு அருகே உள்ள சங்கம் சரத் தியேட்டர் முன்பு வேகமாக லாரி ஒன்று வந்துள்ளது. அதே சமயத்தில் பெத்தானியை பள்ளி மாணவர்களை கொண்டு வந்த ஆட்டோ ஒன்று சாலையை கடக்க முயன்ற போது லாரி மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஆட்டோ சாலையில் தூக்கி வீசப்பட்டு கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த 8 மாணவர்களும் படுகாயமடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த லாரி ஓட்டுனர் அவ்விடத்திருந்து தப்பிக்க முயன்ற போது பொது மக்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் சிறுது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.