குழந்தையின்மை.. கோழிகுஞ்சியை முழுங்கிய ஆண்.. சற்று நேரத்தில் நடந்த விசித்திரத்தால் அதிர்ச்சி.!



Satiskar men swallow alive chicken for baby

குழந்தை இல்லா தம்பதி

சத்தீஸ்கர் மாநிலத்தின் அம்பிகாபூர் பகுதியில் அமைந்துள்ள சிந்த்கால் என்னும் கிராமத்தை சேர்ந்த ஆனந்த் யாதவ் (35 வயது) என்பவர் தன்னுடைய மனைவியுடன் வசித்து வந்துள்ளார். திருமணமாகி நீண்ட நாட்களாகியும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்காக அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சென்று முயற்சித்துள்ளனர். ஆனால் குழந்தை பிறக்கவில்லை.

மயங்கி விழுந்து உயிரிழப்பு

இத்தகைய நிலையில், சம்பவ தினத்தில் குளித்துவிட்டு வீட்டிற்கு வந்த ஆனந்த் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு அருகில் இருந்த மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கே ஆனந்தை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் முன்பாகவே உயிரிழந்து விட்டார் என்று கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: ஈரக்குலை நடுங்குதே.. கிரைண்டரில் சட்டை சிக்கி 19 வயது இளைஞர் பலி.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள் உள்ளே.!

Satiskar

உயிருடன் இருந்த கோழி குஞ்சு

இதனைத் தொடர்ந்து, ஆனந்த் யாதவ் எப்படி இறந்தார் என்பது பற்றி உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. அந்த உடற்கூறு ஆய்வில் அவரது தொண்டையில் கோழி ஒன்று உயிருடன் இருந்தது தெரிய வந்துள்ளது. அவர் இறந்ததற்கு காரணமும் அந்த கோழி தான் என்று தெரிய வருகிறது. சுவாசக் குழாய் மற்றும் உணவுக் குழாயை அந்த உயிருள்ள கோழி அடைத்துள்ளது. இதனால், மூச்சு திணறி ஆனந்த் யாதவ் உயிரிழந்திருப்பார் என்று கூறப்படுகிறது.

உயிருடன் கோழியை விழுங்கும் சடங்கு

அவர் ஏன் உயிருள்ள கோழியை முழுங்கினார் என்று அவரது சொந்த கிராமத்தில் போலிசார் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் அமானுஷ்யத்தை காரணம் காட்டுகின்றனர். குழந்தை இல்லாதவர்கள் செய்யக்கூடிய சடங்கின் ஒரு பகுதியாக உயிருள்ள கோழி குஞ்சியை முழுங்கும் சடங்கை ஆனந்த் யாதவ் மேற்கொண்டு இருக்கலாம் என்றும், இதனால்தான் அவர் உயிரிழந்திருப்பார் என்றும் அந்தப் பகுதியில் தெரிவிக்கப்படுகிறது. இந்த சடங்கில் அவரை ஈடுபடுத்தியது யார் என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஐயப்பன் கோவிலில் பெரும் அசம்பாவிதம்; பக்தர் தற்கொலை.!