மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாதவிடாய் நாட்களில் ஊதியத்துடன் விடுமுறை.. அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நிறுவனம்.!
தொழில்நுட்ப துறையில் கோலோச்சி இருக்கும் ஸ்காலர் (Scaler InterviewBit) நிறுவனம், தனது நிறுவனத்தில் பணியாற்றி வரும் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு மாதவிடாய் நாட்களில் ஊதியத்துடன் விடுப்பு எடுக்க அனுமதி வழங்கியுள்ளது.
ஜனவரி 1 ஆம் தேதி முதல், மாதத்திற்கு மாதவிடாய் விடுமுறையாக ஒன்று அல்லது இரண்டரை நாட்கள் வரை ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாதவிடாய் விடுமுறையை எடுக்க விரும்பும் பணியாளர்கள், தங்களின் மேலாளருக்கு தகவலை தெரிவித்து அந்த நாட்களுக்கான விடுமுறையை ஊதியத்துடன் பெற்றுக்கொள்ளலாம்.
33 % பெண் பணியாளர்களுடன் செயல்பட்டு வரும் ஸ்காலர் நிறுவனம், தனது நிறுவனத்தில் பணியாற்றி வரும் பெண்களை பாதுகாக்கவும், மேலும் பெண்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கவும், அவர்களின் உடல்நலத்தை பேண பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் அறிவிப்பு மூலமாக பெண்களுக்கு வருடத்தில் வழங்கப்படும் சனி, ஞாயிறு, அரசு பொதுவிடுமுறை, சுய விடுப்பு, ஈடு செய்யும் விடுப்புடன் சேர்ந்து கூடுதலாக 12 நாட்கள் மாதவிடாய்காக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.