ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பள்ளி பருவத்து காதல்... பெற்றோர்களின் எதிர்ப்பால் விபரீதத்தில் முடிந்த காதல் கதை..!
உத்திர பிரதேச மாநிலம் மகாராஜ் கஞ்சில் பகுதியை சேர்ந்தவர் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன். இவரும் அதே பகுதியை சேர்ந்த சிறுமியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து தங்களது விருப்பத்தை பெற்றோரிடம்கூறியுள்ளனர்.
ஆனால் சிறுமி மைனர் என்பதால் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த காதலர்கள் இருவரும் அவர்கள் பயிலும் பள்ளி வளாகத்திலேயே விஷம் அருந்தி மயங்கி விழுந்துள்ளனர்.
இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவி சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.