#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
2 மாதங்களாக 10 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி தொடர் பாலியல் தொல்லை கொடுத்துவந்த பள்ளியின் பியூன்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!
மும்பை கிராண்ட் சாலையில் அமைந்துள்ள பிரபல பள்ளி ஒன்றில் பியூன் வேலைசெய்துவந்த 35 வயது நிரம்பிய நபர் அதே பள்ளியில் 10ஆம் வகுப்பில் பயிலும் 15 வயது மாணவியிடம் நட்பை வளர்த்துள்ளார். இதனையடுத்து கடந்த ஜூலை மாதத்திலிருந்து அந்த மாணவியை பலமுறை கழிவறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது எனவும் மிரட்டியுள்ளார்.
ஒருக்கட்டத்தில் பியூனின் தொல்லை தாங்கமுடியாத சிறுமி தனக்கு நடந்த கொடூரம் குறித்து தனது தாயாரிடம் கூறி அழுதுள்ளார். இதனைகேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் பள்ளி நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு இதுபற்றி கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பியூனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
விசாரணையில், அந்த பியூன் மாணவியின் செல்போன் எண்ணை வாங்கி வைத்துக்கொண்டு வீடியோ கால் செய்து ஆடைகளை கழற்றச்சொல்லி வற்புறுத்தி வந்துள்ளார். மேலும் அந்த நபர் பள்ளியில் வேறு மாணவிகளிடமும் இதுபோல் நடந்துகொண்டாரா என்றும் போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.