இந்த மனசுதான் சார் கடவுள்.! ஒடிசா ரயில் விபத்து! முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!



sehwag-announced-for-free-education-to-who-loss-their-p

ஓடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குழந்தைகளுக்கு தங்குமிடம், இலவச கல்வி வழங்குவதாக வீரேந்தர் சேவாக் அறிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தில், பாலசோர் மாவட்டத்தில்,  சென்னை நோக்கி வந்த கோரமண்டல் அதிவிரைவு இரயில், பெங்களூரில் இருந்து ஹவுரா நோக்கி பயணித்த துரந்தோ இரயில் மற்றும் சரக்கு இரயில் தடம்புரண்டு மோதிக்கொண்ட கோரவிபத்தில் 280க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர். மேலும் 900 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து உலகளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். மேலும் பாதிக்கபட்டோருக்கு உதவபல தரப்பினரும் முன்வந்துள்ளனர். இந்நிலையில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்கப்படும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் வீரேந்திர சேவாக் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இந்த துயரமான நேரத்தில், நான் செய்யக்கூடியது, இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்வியை ஏற்பதுதான். அத்தகைய குழந்தைகளுக்கு சேவாக் இன்டர்நேஷனல் பள்ளியின் உறைவிட வசதியில் இலவசக் கல்வியை வழங்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.