மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த உலக கோப்பையின் கதாநாயகன் இவர்தான்: வீரேந்திர ஷேவாக் அதிரடி..!!
2023 உலக கோப்பை ஒருநாள் தொடரில் அதிக ரன்களை குவிக்கப் போகும் பேட்ஸ்மேன் குறித்து ஷேவாக் பேசியுள்ளார்.
இந்தியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உலக கோப்பை ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இதன் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்துஅணியும், கடந்த தொடரில் 2வது இடத்தை பிடித்த நியூசிலாந்து அணியும் மோத உள்ளன. இந்திய அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியுடன் மோதவுள்ளது.
இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. கடந்த 2013 சாம்ப்பியன் ஷிப் கோப்பை தொடருக்கு பிறகு, ஐசிசி கோப்பைகளை கோட்டைவிடும் இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலக கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான வீரேந்திர சேவாக் எதிர் வரும் உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிக ரன்களை குவிப்பார் என்று ஆருடம் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும், இந்த தொடரில் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிக ரன்களை குவிக்க வாய்ப்புள்ளது.
பேட்டிங் செய்வதற்கு சாதகமான மைதானங்கள் இந்திய துணை கண்டத்தில் இருப்பது அவர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த தொடரில் வேறு நாடுகளை சேர்ந்த சில வீரர்களும் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. ஒரு இந்தியனாக, நிச்சயம் நான் ரோஹித் சர்மாவையே தேர்ந்தெடுப்பேன்.
கடந்த உலக கோப்பையில் (2019) ரோஹித்தின் எனர்ஜி லெவல், செயல்பாடுகள் அபாரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் அவர் கேப்டனாகவும் இருக்கும் பட்சத்தில் அவர் மிகச் சிறப்பாக செயல்படுவார். வெற்றியில் மிகப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அவர் அதிகளவில் ரன்களை குவித்து அசத்துவார் என்று நம்புகிறேன் என்று ஷேவாக் கூறியுள்ளார்.