மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜூனியரை சேற்றில் தள்ளி தடி அடி! சீனியர் மாணவனின் காட்டுமிராண்டி தனம்!!
மகாராஷ்டிராவில் உள்ள கல்லூரி ஒன்றில் பயின்று வரும் என்சிசி எனப்படும் தேசிய மாணவர் படையில் உள்ள சீனியர் மாணவன் ஒருவன் அவனுக்கு கீழ்ப்படிக்கும் மாணவர்களை சேற்றில் மண்டியிட வைத்து கைகளை பின்னால் வைத்து தடியை கொண்டு சாராமாரியாக அடித்துள்ளார்.
என்சிசி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டபோது நான்கு பேர் தவறாக செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த 4 மாணவர்களையும் பயிற்சி மைதானத்தில் உள்ள ஒரு இடத்தில் சேற்றில் மண்டியிட செய்து சீனியர் மாணவர் ஒருவர் தடியை கொண்டு அடித்துள்ளார்.
இந்த வீடியோ வைரலானது தொடர்ந்து அந்த மாணவன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது குறித்து அந்த கல்லூரி முதல்வர் சுசித்ரா நாயக் கூறுகையில் இச்சம்பவம் போன்று இதற்கு முன் இதுவரை நடந்தது இல்லை.
மேலும் அந்த என்சிசி மாணவர்களை அடித்தது எங்கள் கல்லூரியை சேர்ந்த மாணவன் கிடையாது. அவர் எங்களது நிர்வாகத்தில் இருக்கும் மற்றொரு கல்லூரியை சேர்ந்த மாணவன். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரிப்பதற்கான கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.