53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
பரபரப்பு..பள்ளி சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய ஆசிரியர் கைது..!
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஹிந்தி ஆசிரியராக சோமராஜு பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் சோமராஜு தான் பணியாற்றும் பள்ளியில் ஒரு மாணவியிடம் பேசி பழகி வந்துள்ளார். இதனையடுத்து மாணவியிடம் ஆசை வார்த்தைகளை சொல்லி மயக்கியுள்ளார். மேலும் அவரது செல்போனை சிறுமியிடம் கொடுத்து அவரை தன்வசப்டுத்தி இருக்கிறார்.
இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் மாணவியை தன் வீட்டிற்கு அழைத்து சென்று திருமணம் செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. இதனையடுத்து மாணவியிடம் பாலியல் சீண்டலில் சோமறாஜு ஈடுபட்டுளார். இதனால் பயந்துபோன சிறுமி அவரிடமிருந்து தப்பி சென்று தன் பெற்றோரிடம் நடந்ததை எல்லாம் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை பீமாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் ஹிந்தி ஆசிரியர் சோமராஜூ மீது காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சோமராஜுவை உடனடியாக போலிசார் கைது செய்தனர்.
மேலும் ஆசிரியர் சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.