திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஷாக்.. பள்ளிக்கு செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு சிறுமி உயிரிழப்பு.!
கர்நாடக மாநிலம் சிக்கமங்களூர் மாவட்டம் கேசவலு ஜோகன்னாகெரே பகுதியில் வசித்து வருபவர் 7 வயது நிரம்பிய சிறுமி ஸ்ருஷ்டி. இவர் அதே பகுதியில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் காலை பள்ளிக்கு நடந்து சென்ற சிறுமி திடீரென மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.