திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஐயையோ... செல்போன் சார்ஜர் வெடித்து கூலி தொழிலாளி பரிதாப பலி.!
தெலுங்கானா மாநிலத்தில் செல்போன் சார்ஜர் வெடித்து சிதறியதில் மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் .
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான ஷேக் பாஷா(35) தெலுங்கானா மாநிலத்தின் முலுகு மாவட்டத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் தனது செல்போனை சார்ஜ் செய்து கொண்டே பேசியதாக தெரிகிறது.
இதில் செல்போன் வெடித்து சிதறியதில் மின்சாரம் பாய்ந்து ஷேக் பாஷா பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இந்த எதிர்பாராத விபத்தால் அவர் உயிரிழந்து விட்ட நிலையில் அவரது மனைவியும் குழந்தைகளும் செய்வதறியாது திகைத்து நின்றது கண் கலங்க கண்கலங்க வைத்தது.