குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
இளம் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இன்ஸ்பெக்டர்... இணையதளத்தில் வெளியான ஷாக்கிங் வீடியோ.!
உத்திரபிரதேச மாநிலத்தில் இளம் பெண்ணை நம்ப வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காவல்துறை அதிகாரியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உத்திரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டரான அம்ரேஷ் சிங் என்பவர் இளம் பெண்ணுக்கு உதவுவதாக கூறி அவரை விடுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு வைத்து அந்த இளம் பெண்ணிடம் அத்துமீற முயன்றதாக தெரிகிறது.
மேலும் அந்தப் பெண்ணை இன்ஸ்பெக்டர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது அந்தப் பெண் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோ வைரலானதோடு நெட்டிசன்கள் இதற்கு கடும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.
#UPPolice की पेंट उतारते युवती ने बनाया वीडियो, मदद के नाम पर पुलिस युवती को होटल ले जा कर बदतमीजी कर रहे थे,यूपी की मित्रवत पुलिस की ये वीडियो वायरल हो गई @Uppolice @lkopolice @dgpup @GSOtoDGPUP @uppstf @upprpb @DgPrisons @cyberpolice_up @UpPolicemitra pic.twitter.com/ZtCBAtzOyz
— Tv 24 Network (@Tv24networkes) September 9, 2023
காவல்துறை அதிகாரியே இது போன்ற கொடூர செயலில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களிலும் கடும் கண்டனங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தி இருக்கிறது. அந்த அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.