கல்லூரிகள் திறக்கப்பட்டால் விடுதி அறையில் ஒரு மாணவர்தான்..! விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடு.!
கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் கடந்த மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது. கொரோனாவால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்து வந்தநிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தப்பட்டு வந்தது. இந்தநிலையில் கல்லூரிகள் திறக்கப்பட்டால் விடுதிகளில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க வைக்கப்பட வேண்டும் என யுஜிசி கட்டுப்பாடு விடுத்துள்ளது.
அதில், கல்லூரிகள் திறக்கப்பட்டால் விடுதிகளில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க வைக்கப்பட வேண்டும். கல்லூரிகள் திறக்கப்பட்ட பின் வரும் விடுதி மாணவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். கொரோனா இல்லை என சான்றிதழ்கள் கொண்டு வந்தாலும் மாணவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
மேலும், மாணவர்கள் நோய் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்பதால் விடுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். இதனால் விடுதிகளில் கட்டுப்பாடுகளை பின்பற்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் திட்டமிட்டபடி கல்லூரிகள் திறக்கப்பட்டு விடுதிகள் செயல்படுமா? என மாணவர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.