மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Video : களவாணி படத்தை மிஞ்சிய சம்பவம்., பெண்ணை தூக்க, மண்டபத்திற்குள் புகுந்த கும்பல்.. பின் நடந்த கூத்தை பாருங்கள்.!
ஆந்திர மாநிலத்திலுள்ள கோதாவரி, கடையம் பகுதியில் வசிக்கும் பட்டின வெங்கடானந்து என்ற இளைஞர் சினேகா என்ற பெண்ணை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். சினேகாவும் அந்த இளைஞரை மனப்பூர்வமாக விரும்பியுள்ளார். தங்களது காதலை இருவரும் குடும்பத்தினரிடம் தெரிவித்த போது சினேகாவின் வீட்டினர் அந்த காதலுக்கு பயங்கர எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் இளைஞரின் வீட்டில் திருமணத்திற்கு ஒப்பு கொண்டுள்ளனர். எவ்வளவு முயற்சி செய்தும் பெண்ணின் குடும்பத்தினர் அந்த திருமணத்தை ஒத்துக் கொள்ளவில்லை.
எனவே, இனி காத்திருந்து பயனில்லை என்று முடிவெடுத்த சினேகா குடும்பத்தினர் உதவி இல்லாமல் காதலனை கரம் பிடிக்க நினைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தான் காதலித்த நபர் வெங்கடானந்து மற்றும் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து சினேகா திருமணம் செய்து கொண்டார். மண்டபத்தில் திருமணம் முடிந்த நிலையில், மணக்கோலத்தில் இருந்த சினேகாவை அங்கிருந்து குண்டு கட்டாக கடத்திச் செல்ல அவருடைய குடும்பத்தினரை ஆட்களை ஏற்பாடு செய்திருந்தனர்.
Bride Targeted in Shocking Kidnap Attempt at Andhra Pradesh Wedding! pic.twitter.com/AfeLhZl720
— Aksh (@akshra_in) April 23, 2024
இதை தடுக்க மணமகனின் வீட்டினர் முயற்சித்துள்ளனர். அவர்கள் மீது சினேகாவின் குடும்பத்தினர் மிளகாய் பொடியை தூவி, தாக்கி சினேகாவை கடத்த முயன்றனர். ஆனால், அவர்களது முயற்சி வீணானது. இதற்குள் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட போலீசார் சினேகாவின் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மணப்பெண்ணை சினிமா பாணியில் மண்டபத்திலிருந்து கடத்த முயன்ற பரபரப்பு மிக்க வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அது கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.