காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
தொடர்ந்து 6 மணி நேரம் பப்ஜி கேம் ஆடிய பள்ளி மாணவன் மரணம்! நடந்தது என்ன?
போபாலில் தொடர்ந்து 6 மணி நேரம் மொபைலில் பப்ஜி கேம் ஆடிய பள்ளி மாணவன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த மே 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தான் இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நசீராபாத் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவர் ஃபர்கன் குரேசி. இவர் அதே பகுதியில் உள்ள கேந்திரியா வித்தியாலயா பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துள்ளார்.
குரேசியின் குடும்பத்தினர் சில நாட்களுக்கு முன்பு மபியில் அள்ள நீமூச் என்ற கிராமத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அவரின் உறவினர்கள் கல்யாண வேலைகளில் பிஸியாக இருந்துள்ளனர். குரேசி மட்டும் அடிக்கடி மொபைலில் பப்ஜி கேம் ஆடியுள்ளார்.
இதனை கண்டு பலமுறை அவரது உறவினர்கள் கண்டித்துள்ளனர். ஆனாலும் குரேசி கேம் விளையாடுவதை நிறுத்தவில்லை. 25 ஆம் தேதி முழு இரவும் தூங்காமல் கேம் விளையாடியுள்ளார். மேலும் மறுநாள் 26 ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு பப்ஜி கேம் ஆட ஆரம்பித்த குரேசி மாலை 6:30 மணி வரை 6 மணி நேரம் தொடரந்து ஆடியுள்ளார்.
குரேசி கேம் ஆடிய அறைக்குள் அவரது இளைய சகோதரி ஒருவரும் இருந்துள்ளார். அப்போது தீடீரென குரேசி "சுடுடா சுடுடா" என கத்திவிட்டு "டேய் அயன் நீ என்னை இந்த ஆட்டத்தையும் என் வாழ்க்கையையும் தோற்கடிக்க செய்துவிட்டாய், நான் இனி உன் கூட விளையாட மாட்டேன்" என கத்தியவாறே பக்கத்தில் இருந்த கட்டிலில் திடீரென சாய்ந்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியுற்ற அவரது சகோதரி உடனே தந்தையை அழைத்து வந்தார். உடனே அவர்களது தந்தை மற்றும் உறவினர்கள் ஓடி வந்து பார்க்கும் போது குரேசி பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். இதனால் அதிர்ந்துபோன உறவினர்கள் குரேசியை உடனே அருகிலிருந்த மருத்துவமணைக்கு தூக்கி சென்றனர்.
ஆனால் அங்கு குரேசியை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும் அந்த இதய மருத்துவர் இதுகுறித்து தெரிவிக்கையில், இந்த சம்பவம் தீடீரென உண்டாகும் அதிர்ச்சி மற்றும் அழுதத்தால் ஏற்பட்ட மாரடைப்பால் தான் நிகழ்ந்துள்ளது. திடீரென ஏற்படும் இழப்புகளை தாங்கிகொள்ள முடியாமல் இதயம் வெடிப்பதால் தான் இப்படி நிகழ்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.